×

கன்னி

16.5.2024 முதல் 22.5.2024 வரை

சாதகங்கள்: இரண்டாம் இடத்து தன குடும்பாதிபதி சுக்கிரன் இப்பொழுது அஷ்டமத்தில் இருந்தாலும் எந்தக் கஷ்டத்தையும் தரமாட்டார். வார இறுதியில் அவர் தனது சொந்த ராசியான பாக்கிய ஸ்தானத்துக்கு வருவதும், அங்கே சூரியன் குருவோடு இணைவதும், குரு உங்கள் ராசியைப் பார்ப்பதும் நல்ல அமைப்பு. காத்திருந்த சில நல்ல செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட சுக்கிர பலத்தால் குறையும். ஆறாம் இடத்தில் உள்ள சனி உங்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்வார். பகை உணர்வை குறைப்பார். தாமதத்தை நீக்குவார். வேலைக்காரர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு கீழே பணிபுரிபவர்கள் உங்கள் யோசனை பிரகாரம் நடப்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

கவனம் தேவை; ராசியில் சர்ப்ப கிரகமான கேது இருப்பதாலும் ராகுவும் செவ்வாயும் இணைந்து கேதுவைப் பார்ப்பதாலும் நீங்களாக எந்தச் சிக்கலையும் குடும்பத்தில் வரவழைத்துக் கொள்ளக் கூடாது. அவசரப்பட்டு வார்த்தைகளை கொடுத்துவிட்டு அதை விவகாரம் ஆக்கி விடக்கூடாது. குழப்பங்கள் அவ்வப்போது மனதிலே எழுவதற்கான சூழ்நிலைகளை ஜென்மத்தில் அமர்ந்திருக்கும் கேது உண்டாக்குவார் என்பதால் முன்யோசனையோடு காரியங்களைச் செய்யுங்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை காகத்திற்கு ஒரு உருண்டை சாதம் வையுங்கள். பிதுர் காரியங்களை மறக்க வேண்டாம்.

Tags : Virgin ,
× RELATED கன்னி